பேட்டரியில் இயங்கும் விறகு அடுப்பு: ராசிபுரம் விவசாயி தயாரிப்பு
பேட்டரியில் இயங்கும் விறகு அடுப்பு தயாரிப்பில் விவசாயி செல்வம்
Viragu Aduppu-எரிவாயு பயன்படுத்தி சமையல் செய்யப்படும் இந்த காலகட்டத்தில், விறகு அடுப்பு என்பதே கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டது. விறகு அடுப்பு என்பது கிராமங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. ஆனால், விறகு அடுப்பில் சமைப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது அடுப்பூதும் பெண்களுக்கே தெரியும். இந்நிலையில் அடுப்பூதும் வேலையை குறைக்கும் விதமாக புதிய வகை அடுப்பு ஒன்றை ராசிபுரத்தில் உள்ள விவசாயி ஒருவர் தயாரித்துள்ளார். பேட்டரியில் இயங்கும் நவீன விறகு அடுப்பு கிராமப்புற மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள முள்ளுக்குறிச்சி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம் (42). இவர், பேட்டரியில் இயங்கும் நவீன விறகு அடுப்பை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கிராமப்புறங்களில் அதிக அளவில் விறகு கிடைப்பதால், இவரது அடுப்பு கிராமப்புற மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாதாரண 12 வோல்ட் பேட்டரியில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விறகு அடுப்பு சுமார் 22 கிலோ எடை கொண்டதாகும்.
பயிர்களுக்கு மருந்து அடிப்பதற்கு பயன்படும் கருவியின் பேட்டரியை கொண்டு, வேகக் கட்டுப்பாடு கருவியை பொருத்தி சிறிய மின்விசிறி மூலம் காற்றை செலுத்தி குறைந்த அளவு விறகுகளை வைத்து அதிக நெருப்பு வரும்வகையில் இந்த அடுப்பை வடிவமைத்துள்ளார். இந்த அடுப்புக்கு எரிவாயு சிலிண்டருக்கு ஆகும் செலவை விட குறைந்த செலவே ஆகிறது.
மேலும் இந்த அடுப்பின் மூலம் வேகமாகவும் சமைக்கவும் முடியு என்பதால் பலர் விரும்பி வாங்கிச் செல்வதாகக் கூறும் செல்வம், மேலும் இதனைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்றார்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது இவரது விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu