ராசிபுரத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி

ராசிபுரத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி
X

ராசிபுரத்தில் நடைபெற்ற, 9வது தேசிய கைத்தறி தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் உமா, நெசவாளர்களுக்கு முத்ரா திட்ட கடன் உதவிகளை வழங்கினார்.

ராசிபுரத்தில் நடைபெற்ற, 9வது தேசிய கைத்தறி தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டு நெசவாளர்களுக்கு முத்ரா திட்ட கடன் உதவிகளை வழங்கினார்.

ராசிபுரத்தில் நடைபெற்ற, 9வது தேசிய கைத்தறி தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டு நெசவாளர்களுக்கு முத்ரா திட்ட கடன் உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், 9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கைத்தறிக் கண்காட்சியை துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

மேலும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 20 பணியாளர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். விழாவில், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ், 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவியை வழங்கினார்.

விழாவில் ஆட்சியர் உமா பேசியதாவது:

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், கடந்த 2015ம் ஆண்டு முதல், ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், 9-வது தேசிய கைத்தறி தினத்தினை சிறப்பிக்கும் வகையில் ராசிபுரத்தில் கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது.

நெசவாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மாவட்ட தொழிலாளர் நல வாரியத்துடன் இணைந்து அமைப்பு சாரா நெசவாளர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் முகாமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நெசவாளர்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் உடனடியாக உறுப்பினர்களாகி பயன் பெறலாம்.நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து, சிறப்பாக நெசவு தொழிலை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

சிறப்பு கைத்தறி கண்காட்சியில் திருச்செங்கோடு சரகத்திற்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கைத்தறி துண்டுகள், வேட்டிகள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம், பட்டு சேலைகள் மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட வடிவமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைத்தறி சேலைகள் ஆகிவற்றை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். கண்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகை கைத்தறி துணிகளுக்கும் 20% அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, ராசிபுரம் நகராட்சி, வேலாப்பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில், கைத்தறித்துறை உதவி இயக்குநர் பழனிகுமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!