இராசிபுரம் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு

இராசிபுரம் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராசிபுரம் அருகே லாரி மோதியதால், டூ வீலரில் சென்ற தனியார் கல்லூரி பணியாளர் உயிரிழந்தார்.

ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட, கண்ணையா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் சுந்தர் (40), இன்னும் திருமணம் ஆகவில்லை. டிப்ளமோ படித்துள்ள இவர் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வேலையை முடித்து விட்டு டூ வீலரில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இரவு 7 மணியளவில் ராசிபுரம் அடுத்துள்ள பொன்குறிச்சி பஸ் ஸ்டால் அருகில் வந்தபோது, ராசிபுரத்தில் இருந்து வையப்பமலை நோக்கிச் சென்ற லாரி ஒன்று அவரது டூ வீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுந்தர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story