நாமகிரிப்பேட்டை அருகே கல்லூரி பஸ் மோதி 10 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு

பஸ் மோதியதில் உயிரிழந்த மாணவன் பிரபாகரன்..
Today Accident News in Tamil - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, மெட்டாலா அருகே நாரைக்கிணறு பிரிவு, செம்மண்காடு பஸ் ஸ்டாப் அருகே, ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்குச் செல்வதற்காக பிரபாகரன் (வயது10) என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் மதுமிதா (18), கிருத்திகா (18) ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது முள்ளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் வழியாக நாமக்கல் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் அதிவேகமாக வந்துள்ளது. எதிர்புறம் வந்த லாரியின் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் கல்லூரி பஸ்சை அதன் டிரைவர் இடதுபுறமாக திருப்பியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகே இருந்த பஸ் ஸ்டாப்பிற்குள் புகுந்து, தனியார் பள்ளி பஸ்சிற்காக காத்திருந்த மாணவன் மற்றும் இரண்டு கல்லூரி மாணவியர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 5ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 2 கல்லூரி மாணவிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu