கந்தம்பாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

கந்தம்பாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை
X
கந்தம்பாளையம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே குன்னமலை பஞ்சாயத்து இரும்பு பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கண்ணன் (27). இவர் கிளீனிங் பவுடர் விற்பனை செய்து வருகிறார். பெருங்குறிச்சி கருந்தேவம்பாளையத்தை சேர்ந்த மணி மகள் சத்யா (27). இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கண்ணனுக்கும், சத்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஜெயதேவ் (4) என்ற மகனும், ராஷ்மிகா (3) என்ற மகளும் உள்ளனர். கண்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வெறுப்படைந்த சத்யா, சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார். சத்யாவின் தந்தை மணி நல்லூர் போலீஸ் நிலையத்தில், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், மருமகன் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். திருமணமான 5 ஆண்டுகளுக்குள் பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து திருச்செங்கோடு சப் கலெக்டர் இளவரசி விசாரணை செய்து வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!