பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
X
பரமத்திவேலூர் அருகே உடல்நலக்குறைவால் விரக்தியடைந்து பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உடல்நலக்குறைவால் விரக்தியடைந்து பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே உள்ள குப்பிரிக்காபாளையத்தை சேர்ந்த செங்கோடகவுண்டர், இவரது மனைவி சரஸ்வதி (61). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த சரஸ்வதி கடந்த 30-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி, சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்