கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு வெள்ளை கற்கல் கடத்தல்

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு  வெள்ளை கற்கல் கடத்தல்
X
கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு வெள்ளை கற்கல் கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிக்கு அரசு அனுமதியின்றி வெள்ளை கற்கள், லாரியில் கடத்தப்படுவதாக நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்க துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குனர் பூர்ணவேல் மற்றும் பரமத்தி போலீசார் பரமத்தி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் வெள்ளை கற்கள் (வெங்க செங்கல்) இருப்பதும், அவை கரூர் மாவட்டம் வெள்ளியனையில் இருந்து, அரசு அனுமதி பெறாமல், பரமத்திவேலூர் அருகே பில்லூரில் உள்ள கல் அரைக்கும் ஆலைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியை (38) போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!