பப்ஜி விளையாட அனுமதி மறுப்பு; பள்ளி மாணவன் தற்கொலை

பப்ஜி விளையாட அனுமதி மறுப்பு; பள்ளி மாணவன் தற்கொலை
X

பைல் படம்

ப.வேலூர் அருகே, செல்போனில் பப்ஜி விளையாட பெற்றோர் அனுமதிக்காததால், பள்ளி சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவடம், பரமத்திவேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அருகே உள்ள சிறுநல்லிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன், விவசாயி. இவரது மகன் பிரதீஷ் (17), ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பிரதீஷ் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார். அப்போது அவர் செல்போனில் பப்ஜி விளையாட்டை டவுன் லோடு செய்து அடிக்கடி விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான பிரதீஷ், படிப்பதை விட்டுவிட்டு, பப்ஜி விளையாடுவதே வழக்கமாக கொண்டிருந்தாராம்.

இதனை கவனித்த பெற்றோர், பப்ஜி விளையாட்டை நிறுத்தி விட்டு பாடத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்று கண்டித்துள்ளனர். பப்ஜி விளையாட பெற்றோர் அனுமதி மறுத்ததால் மனமுடைந்த பிரதீஷ் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார்.

சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவரை பெற்றோர் உடனடியாக கொண்டு வந்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீஷ் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products