பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு: 4 கடைகளுக்கு சீல் வைப்பு
பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அவர்களிடம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் மற்றும் வெங்கரை டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் செயல்பட்டு வருவதாக ப.வேலூர் போலீசாருக்கும், வெங்கரை மற்றும் பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப.வேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் தலைமையில், பரமத்தி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் உமாராணி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பாண்டமங்கலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஒரு மொபைல் கடை மற்றும் ஒரு பேக்கரிக்கு சீல் வைத்ததனர். அதனர் உரிமையாளர்களிடம் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோல் வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு மொபைல்கடை மற்றும் ஒரு ஜெராக்ஸ் கடைக்கு ப.வேலூர் போலீசார் மற்றும் வெங்கரை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யமுனாராணி ஆகியோர் பூட்டி சீல் வைத்து தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu