ஜேடர்பாளையம் அருகே லாரி மோதி மளிகைக்கடை உரிமையாளர் பலி

ஜேடர்பாளையம் அருகே லாரி மோதி  மளிகைக்கடை உரிமையாளர் பலி
X
ஜேடர்பாளையம் அருகே, லாரி மோதியதால், டூ வீலரில் சென்ற மளிகைக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, இறையமங்கலம் அருகே உள்ள காட்டுவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (40). இவர், இறையமங்கலத்தில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு திருமூர்த்தி, சோழசிராமணி அருகே உள்ள சக்திபாளையத்திற்கு தனது டூ வீலரில் வந்தார்.

பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருமூர்த்தி, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிந்தார். இது குறித்து, ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி