ப.வேலூர் ஜமாபந்தியில் மனு கொடுத்த 1 மணி நேரத்தில் பட்டா மாறுதல் உத்தரவு
பரமத்திவேலூர் நடைபெற்ற ஜமாபந்தியில், மனு பெற்ற ஒரு மணி நேரத்திற்குள், பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
பரமத்திவேலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில், மனு கொடுத்து ஒரு மணி நேரத்திற்குள், பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெற்து. இதில், கபிலக்குறிச்சி, எளம்பள்ளி, இ.நல்லாகவுண்டம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம், கொத்தமங்கலம், வடகரையாத்தூர் மேல்முகம், அக்ரஹார குன்னத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, ஸ்மார்ட் ரேசன் கார்டு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 64 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
மனுக்களின் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இன்று ஜமாபந்தி முடிவதற்குள் தீர்வு வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மனு அளித்த ஒரு மணி நேரத்திற்குள், 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பரமததிவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், துணை தாசில்தார் சித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu