ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய மோகனூர் காவிரி ஆறு
காவிரி ஆறு
கொரோனா ஊரடங்கால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால் ஆடிப்பெருக்கு நாளில் மோகனூர் காவிரி ஆறு வெறிச்சோடியது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள காவிரி ஆற்றில் ஆண்டுதோறும், ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஈஸ்வரன் கோயிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும், ஆண்டு முழுவதும் வீடுகளில் செல்வம் பெருக வேண்டி, ஏராளமான பெண்கள், கருகமணி வைத்து கன்னிமார் சுவாமிக்கு பூஜை செய்து வழிபடுவர். மாலை, நவதானியங்களால் ஆன முளைப்பாரி விடுவதுடன், புதுமணத்தம்பதிகள், சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்வார்கள். இந்தநிலையில், கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த, ஆடிப்பெருக்கான நேற்று, ஆறுகள், வாய்கால்கள் உள்ளிட்ட எந்த வித நீர்நிலைகளிலும் குளிப்பதற்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், காவிரிக்கரை அமைந்துள்ள மோகனூர், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், காவிரி ஆற்றுக்கும், கோயிலுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையொட்டி காவிரி ஆற்றில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குளிப்பதற்கும், சுவாமி வழிபாட்டிற்கும் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். ஆடிப்பெருக்கன்று மக்கள் வெள்ளமாக கூடும் காவிரி ஆறு, ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu