ப.வேலூர் நிதி நிறுவன அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின் கள்ளக்காதலன் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

பரமத்திவேலூர் பைனான்ஸ் அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

பரமத்திவேலூர் சண்முகா நகரை சேர்ந்தவர் நடராஜன் (52), பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி கிருத்திகா (36). நடராஜன் தனக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரங்களை கோபால் (35) என்பவரை மேனேஜராக வைத்து இயக்கி வந்தார். கோபாலுக்கும் நடராஜன் மனைவி கிருத்திகாவுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இது தெரிந்த கோபால் இருவரையும் கண்டித்துள்ளார். கிருத்திகாவும் கள்ளக்காதலன் கோபாலும் சேர்ந்து நடராஜனை கொலை செய்ய முடிவு செய்தனர்.

கோபாலின் நண்பரான திருச்செங்கோடு அருகே உள்ள சித்தளந்தூரைச் சேர்ந்த, ஹோட்டல் தொழிலாளி யோகேஸ்வரன் (29) என்பவர் மூலம், நடராஜனை கொலை செய்ய முடிவு செய்தனர். சம்பவத்தன்று, நடராஜன் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு கத்தியுடன் வந்த யேகேஸ்வரன், அவரை கத்தியால் வெட்டினார். அப்போது நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்த அவரை ப.வேலூர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

யோகேஸ்வரனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கிருத்திகாவையும், யோகேஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கோபாலை பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ப.வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் தனிப்படையினர் கோபாலை கைது செய்தனர்.

பின்னர் கோபால் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நடராஜனிடம் வேலை பார்த்த போது அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தேன், அப்போது அவரது மனைவி கிருத்திகாவிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தோம். இதையறிந்த நடராஜன் என்னை கண்டித்ததால் எங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த நடராஜனை தீர்த்துக்கட்ட நானும் கிருத்திகாவும் முடிவு செய்தோம். இதுகுறித்து எனது நண்பர் யோகேஸ்வரனிடம் தெரிவித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

இதையொட்டி சம்பவத்தன்று, கிருத்திகாவை வெளியே எங்காவது சென்று விடுமாறு கூறி விட்டு ஒரு பையில் அரிவாளை மறைத்து வைத்து யோகேஸ்வரனை நடராஜன் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அங்கு வீட்டில் தனியாக இருந்த நடராஜனை அரிவாளால் வெட்டிய போது, யோகேஸ்வரன் சிக்கி கொண்டதால், நானும் போலீசாரிடம் சிக்கிக் கொள்வேன் என பயந்து தலைமறைவானேன் என்று கூறியுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!