கரும்புக்கு நடவு மானியமாக ரூ.10 ஆயிரம்; விவசாயிகள் கோரிக்கை

கரும்புக்கு  நடவு மானியமாக ரூ.10 ஆயிரம்; விவசாயிகள் கோரிக்கை
X

பைல் படம்.

கரும்பு விவசாயிகளுக்கு முன்பட்ட மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு முன்பட்ட மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ள மனுவில், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில், வழக்கமாக செப்டம்பர் மாதம் துவங்கி டிசம்பர் இறுதிக்குள் 60 முதல் 70 சதவீதம் வரையான கரும்பு நடவு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த காலத்தில் 3,500 முதல், 4,000 ஏக்கர் கரும்பு நடவு செய்வது நடைமுறையில் உள்ளது.

கடந்த ஆண்டு நடவு பருவத்தில், மற்ற ஆலைகளில் வழங்குவதைப் போல், மோகனூர் சர்க்கரை விவசாயிகளுக்கும் நடவு மானியம் வழங்க, ஆலை நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் மானியம் வழங்கப்படவில்லை. அதனால் விவசாயிகளும் கரும்பு நடவு செய்ய போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த ஆண்டு (2021–22 அரவை பருவத்துக்கு) ஆலைக்கு போதிய கரும்பு பரப்பு இல்லை. 4.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய வேண்டிய ஆலை, வரும் ஆண்டில் 1.50 லட்சம் டன்கள் மட்டுமே அரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் ஆண்டு அரவை பருவத்துக்கு, முன்பட்ட நடவு செப்டம்பர் முதல் டிசம்பர் முடிய நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினால் அதிகப்படியான கரும்பு நடவு செய்வதற்கு வாய்ப்புள்ளது. தமிழக அரசு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முன்பட்ட கரும்பு நடவு மானியம் வழங்கி அதிக பட்ச கரும்பு உற்பத்தி செய்ய உதவ வேண்டும்.

அருகில் உள்ள சர்க்கரை ஆலைகள், கடந்த பருவத்தில் நடவு மானியம் ஏக்கருக்கு ரூ.8,000 முதல் 10 ஆயிரம் வரை வழங்கி, அதிகபட்ச கரும்பு நடவு செய்ததால், இந்த ஆண்டு அவர்களது ஆலைக்கு போதிய கரும்பு கிடைத்துள்ளது. மோகனூர் சக்கரை ஆலை மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முன்பட்ட கரும்பு நடவு மானியத்துக்கு உண்டான உத்தரவை வழங்கி, ஆலைக்கு தேவையான கரும்பு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா