தி.மு.க. எம்.பி. ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தி.மு.க. எம்.பி. ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து ப. வேலூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Protest News -பரமத்தி வேலூரில் தி.மு.க. எம்.பி. ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protest News -இந்துக்களை அவதூறாக பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்துக்களை அவதூறாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் தனது எம்.பி. பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். திரளான இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு