ப.வேலூரில் ரூ.59 ஆயிரம் மதிப்புள்ள தேங்காய் ஏலத்தில் விற்பனை

ப.வேலூரில் ரூ.59 ஆயிரம் மதிப்புள்ள தேங்காய் ஏலத்தில் விற்பனை
X
பரமத்தி வேலூர் ஒழுங்குறை விற்பனைக் கூடத்தில் ரூ.59 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடை பெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 818 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.65-க்கும், சராசரியாக ரூ.26.80-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50 ஆயிரத்து 341-க்கு வியாபாரம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 163 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.29-க்கும், சராசரியாக ரூ.26.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.58 ஆயிரத்து 999-க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

Tags

Next Story