ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.1.43 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.1.43 லட்சத்திற்கு  தேங்காய் ஏலம்
X
பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம் தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் ஏலத்திற்கு, பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 58 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.31க்கும், குறைந்த பட்சமாக ரூ.27.20க்கும், சராசரியாக ரூ.29.10க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.30ஆயிரத்து 281 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம், மொத்தம், ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!