ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப சாவு

ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப சாவு
X

பைல் படம்.

ஜேடர்பாளயைம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, சோழசிராமணியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (35), அவரது நண்பர்களுடன் அதிகாலை 5 மணியளவில் சோழசிராமணியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் ரோட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று வெங்கடாசலம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடாசலத்தை, காரை ஓட்டி வந்த தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த அருண்குமார் (27), காரில் கொண்டு சென்று திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம்போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி