பரமத்திவேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை திருட்டு

பரமத்திவேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை திருட்டு
X

பைல் படம்.

பரமத்திவேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அடுத்துள்ள பிள்ளைகளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (79). இவரது மனைவி கலைச்செல்வி (62). இவரது மூன்றாவது மகள் கார்த்திகா (31). இவர்கள் மூவரும் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு நாமக்கல்லில் நடைபெற்ற உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு வைக்கப்பட்டடிருந்த 4 பவுன் தங்க காசு, 3 பவுன் நகை, ஒரு பவுன் தோடு என மொத்தம் 8 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து ஜெயராஜ் பரமத்தி போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சம்ப இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story