மோகனூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 10 பேர் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

மோகனூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 10 பேரை கைது செய்த போலீசார் ரூ.64 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி. சரோஜ்குமார் தாகூருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், மோகனூர் எஸ்.ஐ ஓவியா தலைமையிலான போலீசார், சர்க்கரை ஆலை வண்டிகேட்டு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கரூர் மாவட்டம், செங்குந்தபுரம் அண்ணாநகர் விஜயகுமார் (40), வேலாயுதம்பாளையம் நல்லசிவம் (50), புகளூர் ராஜ்குமார் (47), வாங்கபாளையம் பிரகாஷ் (37), மோகனூர் கிழக்கு தெரு கதிர்வேல் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் போல் கலர் துண்டு சீட்டில் எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் வைத்து விற்பனை செய்தாக ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம் மற்றும் துண்டு லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

அஇதேபோல், எஸ்.ஐ., சுப்ரமணி தலைமையிலான போலீசார், மோகனூர் வளையப்பட்டி ரோட்டில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்த மோகனூர் வடுகர் தெரு கந்தபெருமாள் (44), முத்துராஜா தெரு முருகேசன் (60), பாலு (42), முரளி (48), புதுச்தெரு சிவா (38) ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.34 ஆயிரத்து 250 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business