ஜேடர்பாளையம் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

Theft Case | Robbery News
X

பைல் படம்.

ஜேடர்பாளையம் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். ஆனங்கூரை சேர்ந்தவர்கள் முத்துசாமி, செந்தில்குமார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் மளிகை கடைகள் நடத்தி வருகின்றனர். ஜேடர்பாளையம் அருகில் உள்ள பிலிக்கல்பாளையத்தில் அஜய் என்பவர் செல்போன் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்கள் 4 பேரும் நேற்று முன் தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் கடைகளை திறக்க வந்தனர்.

அப்போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் செல்போன்கள் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. ஒரே நாள் நள்ளிரவில் மர்ம நபர்கள் 4 கடைகளில் புகுந்து கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!