தேர்தலை புறக்கணிப்போம்- பொதுமக்கள் அறிவிப்பு

தேர்தலை புறக்கணிப்போம்- பொதுமக்கள் அறிவிப்பு
X

பரமத்திவேலூர் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேடு பகுதியில் உள்ள வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் அருகே தனியார் நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார் செல்போன் உயர் கோபுரம் அமைக்ககூடாது. அதனை அகற்ற வேண்டுமென பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 மற்றும் 5வது வார்டு பொதுமக்கள் வருவாய்துறையிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், மனுவை வாங்கிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொத்தனூர் பகுதியில் தனியார் செல்போன் கோபுரத்தை அமைக்ககூடாது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் எனக்கூறி கருப்புக்கொடி கட்டியும், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!