தயார் நிலையில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையம்..!

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, இன்று அதிகாலை, கலெக்டர் உமா, மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ஹர்குன்ஜித்கவுர், ஓனில் கிளமெண்ட் ஓரியா ஆகியோர் முன்னிலையில், ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் :
நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் கடந்த ஏப். 19ம் தேதி பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில், பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையமான, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பாதுகாப்பிற்காக ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அவைனவரும் கடும் சோதனைக்குப்பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் ஒட்டுகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த ஓட்டுகள் அடங்கிய ஓட்டுப்பொட்டிகள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இன்று 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, மாவட்ட கலெக்டர் உமா, மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் ஹர்குன்ஜித்கவுர், ஓனில் கிளமெண்ட் ஓரியா ஆகியோர் முன்னிலையில் தபால் ஓட்டுகள் அடங்கிய பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஓட்டு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டசமபை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம், மொத்தம் 84 மேஜைகள் ஓட்டு எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகள் தனியாக எண்ணப்படும். 6 சட்சடபை தொகுதிகளுக்கும் 17 நுண்பார்வையாளர்கள், 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் என தலா 51 பணியாளர்கள் மொத்தம் 306 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 40 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணும் பணிக்காக வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது பாஸ் பெற்றுள் ஏஜெண்டுகள் சாரிசாரியா ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வந்துகொண்டுள்ளனர். அவர்கள் பலத்த சோதனைக்குப் பிறகு ஓட்டு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். செல்போன்கள், கால்குலேட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கும். அதன் முடிவுகள் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பிறகே அறிவிக்கப்படும். 8.30 மணிக்கு வாக்குப்பதிவு மெசின்கள் திறக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu