வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை சார்பில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக. நாமக்கல் மாவட்ட அளவில் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 5ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
தொழிற்பயிற்சி மையங்களில் படித்து பயிற்சியினை முடித்து, இந்நாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள், அவர்களின் கல்வி, சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற் நிறுவனங்கள் தொழிற்பழகுநர்களின் இண்ட்நெட்டில் நிறைவு செய்திடும் வகையில், உரிய நிறுவன பேனர்களுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களை அறிய, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu