கெட்டிமேடு பகுதியில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு

கெட்டிமேடு பகுதியில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு
X
நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு பகுதியில் நாளை 14ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு பகுதியில் நாளை 14ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில் சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், கொட்டிமேடு துணை மின் நிலையத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை 14ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!