நாமக்கல் மாநகராட்சியில் 12 கிராம பஞ்சாயத்துக்கள் இணைப்பு : அரசு உத்தரவு வெளியீடு

நாமக்கல் மாநகராட்சியில் 12 கிராம பஞ்சாயத்துக்கள்  இணைப்பு : அரசு உத்தரவு வெளியீடு
X

நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசு உத்தரவை, தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி மேயர் கலாநிதியிடம் வழங்கினார். அருகில் துணை மேயர் பூபதி.

நாமக்கல் நகராட்சியுடன் 12 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக முதல்வர் அரசு உத்தரவை வெளியிட்டார்.

நாமக்கல் நகராட்சியுடன் 12 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக முதல்வர் அரசு உத்தரவை வெளியிட்டார்.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு டவுன் பஞ்சாயத்தாக செயல்பட்டு வந்த நாமக்கல் கடந்த 1974ம் ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1998ம் ஆண்டு சேலத்தில் இருந்து நாமக்கல் தனியாகப் பிரிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்டம் உதயமானது. நாமக்கல் நகராட்சி படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, 2021ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நாமக்கல் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

நாமக்கல் நகராட்சி, மொத்தம் 55 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ளது. 30 வார்டுகளாக இருந்த இந்த நகராட்சியில், 2011ல் 9 கிராம பஞ்சாயத்துக்கள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 39 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,19,491 பேர் வசிக்கின்றனர். நகராட்சியின் ஆண்டு வருமானம், ரூ. 25.64 கோடி ரூபாய். இதர வருமானம் ரூ. 19.51 கோடி என, மொத்தம், ரூ. 45.15 கோடியாக உள்ளது.

தற்போதைய பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, 2023ம் ஆண்டு, பிப்.15ல் நடைபெற்ற நகர்மன்ற அவசர கூட்டத்தில், எம்.பி. ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அதைதொடர்ந்து, தமிழக சட்டசபையில், நகராட்சி மற்றும் நிர்வாகங்கள் துறை அமைச்சர் நேரு, தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட 5 நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். கடந்த, மார்ச் 15ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி உத்தரவிட்டர். சில நாட்கள் முன்பு நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் நியமிக்கப்பட்டார். தரம் உயர்த்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சியுடன் வள்ளிபுரம், தொட்டிபட்டி, சிலுவம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காதப்பள்ளி, வீசாணம், மரூர்பட்டி, வேட்டாம்பாடி, ரெட்டிப்பட்டி, வசந்தபுரம், வகுரம்பட்டி, லத்துவாடி ஆகிய 12 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாநகராட்சியாக உதயமானதை அடுத்து, அதற்கான அரசு உத்தரவின் நகலை, நகராட்சித் தலைவரக இருந்து தற்போது மேயராக பதவியேற்க உள்ள கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோரிடம் வழங்கினார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!