நாமக்கல்லில் இன்ஜினியர் வீட்டில் ஒன்பதரை பவுன் தங்கநகை திருட்டு

நாமக்கல்லில் இன்ஜினியர் வீட்டில் ஒன்பதரை பவுன் தங்கநகை திருட்டு
X
சித்தரிப்பு படம் 
நாமக்கல்லில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் ஒன்பதரை பவுன் தங்க நகை திருட்டுப்போனது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, முல்லை நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (30). சாஃட்வேர் இன்ஜினீயர். இவர் சம்பவத்தன்று, இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கணேசபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் காலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒன்பதிரை பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ்குமார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story