தைப்பூச விழா: சேலம் கோட்டத்தில் நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தைப்பூச விழா: சேலம் கோட்டத்தில் நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
X
தைப்பூச விழாவை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுகிறது. இதையொட்டி, பயணிகளின் வசதிக்காக, அரசுப் போக்குரவத்துக்கழக சேலம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தை மாத பவுர்ணமி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று 4ம் தேதி சனிக்கிழமை முதல் சேலத்தில் இருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் இருந்து கபிலர்மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 6-ம் தேதி வரை இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story