செல் போன்களுக்கு சோதனை மெசேஜ்! யாரும் பயப்பட தேவையில்லை - மாவட்ட கலெக்டர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.
நாளை செல் போன்களுக்கு சோதனை மெசேஜ்: யாரும் பயப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
நாளை செல் போன்களுக்கு சோதனை பேரிடர் எச்சரிக்கை மெசேஜ் வரும். இதைக்கண்டு பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை எண்டு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும், அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க, இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையால், செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம், மாதிரி சோதனை பேரிடர்கால எச்சரிக்கை செய்தி நாளை 20 ம் தேதி, பொதுமக்களின் செல் போன்களுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம், இதற்கு எந்த எதிர்வினையும், ரிப்லையும் செய்ய வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu