தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது - பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது  - பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு
X

பட விளக்கம்: ராசிபுரம் நகரில் பாஜக தலைவர் அண்ணாமலை, வீதி வீதியாக நடை பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்தார். அருகில் மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக மாநில துணை தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி ஆகியோர்.

தமிழகம் வன்முறைக் களமாக மாறி வருகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்

ராசிபுரம் நகரில் பாஜக தலைவர் அண்ணாமலை, வீதி வீதியாக நடை பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக மாநில துணை தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி ஆகியோர் உடன் சென்றனர்.

தமிழகம் வன்முறைக்களமாக மாறி வருகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்கு வங்கிக்காக தீவிரவாதத்தை திமுக ஊக்குவிகிறது. தமிழகம் வன்முறைக்களமாக மாறி வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 2வது நாளான நேற்று அவர் சேந்தமங்கலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கு ஆட்சி நடக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஆட்சி நடக்கிறது. அதுதான் ஜனநாயகம் என நினைக்கின்றனர். திமுக தலைமையிலான அரசு பழங்குடியின மக்களுக்கு எதிராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் 11 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் இல்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என தெரிவித்ததது. எனினும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு எதிரான அரசாக திமுக தலைமையிலான அரசு உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். தமிழக முதல்வரை பொறுத்தவரை அவரது குடும்பம் மட்டுமே நன்றாக இருக்ககூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். பாஜக ஆட்சி என்பது அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சி மகன், மருமகனுக்கான ஆட்சி. ஊழல் குறித்து திமுக பேச தகுதி இல்லை. திமுக அமைச்சர்களில் 11 பேர் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் திமுகவினர் பாகிஸ்தான் டீ சர்ட் போட்டுக் கொண்டு சென்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்புகின்றனர். திமுகவுக்கு வாக்கு வங்கி வேண்டுமென்பதற்காக இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கின்றனர். முன் எப்போதும் நடந்திராத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு போடுகின்றனர். தமிழகம் வன்முறைக்களமாக மாறி வருகிறது என்றார்.

ராசிபுரம் :

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் நடை பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர்கள் ராமலிங்கம், .துரைசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!