கோரிக்கை விடுத்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் உடனடி நடவடிக்கை: குடும்பத்தினர் மகிழ்ச்சி

கோரிக்கை விடுத்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலினின்  உடனடி நடவடிக்கை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
X

நாமக்கல் அருகே சிலுவம்பட்டி அருந்ததியர் காலனியில் வசிக்கும் ஓமியோபதி மருத்துவம் படித்தவர், டாக்டர் வேலை வாய்ப்பு கேட்டு மனு, கொடுத்த மறு நாளே வேலை வாய்ப்புக்கான உத்தரவை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் அருகே சிலுவம்பட்டி, அருந்தியர் காலனியில் ஓமியோபதி மருத்துவம் படித்து முடித்த மாணவனுக்கு உடனடியாக பணிநியமன உத்தரவை தமிழக முதல்வர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சிலுவம்பட்டி பஞ்சாயத்து, அருந்ததியர் காலனியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

மேலும் பின்னர் அப்பகுதியில் உள்ள, ஹோமியோபதி டாக்டர் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மற்றும் கல்வி குறித்த விவரங்களையும்கேட்டறிந்தார். அப்போது, ஜெயபிரகாஷ், தான் ஓமியோபதி டாக்டர் படிப்பு முடித்துள்ளதாகவும், தனக்கு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் ஹோமியோ துறையில் வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

பின்னர் நேற்று காலை ஜெயபிரகாஷ் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் அழைப்புவிடுத்தார். பின்னர் ஜெயபிஷகாஷிற்கு நாமக்கல், அரசு மருத்துவ கல்லூரியின் பணிபுரிய பணி நியமன உத்தரவை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கோரிக்கை விடுத்த அடுத்த நாளே பணி நியமன உத்தரவு வழங்கியதற்கு முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், பொதுமக்களின்வேண்டுகோளின் பேரில், சிலுவம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட, அருந்ததியர் காலனிக்கு, ரூ. 27.20 லட்சம் மதிப்பில், குடிநீர் இணைப்பு, வடிகால் வசதியுடன் கான்கிரீட் சாலை அமைப்பதற்காகன நிர்வாக அனுமதி உத்தரவை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் உடனிருந்தார்.

Tags

Next Story
ai and business intelligence