வே.க.பட்டி கொங்குநாடு பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்களுக்கு களப்பயணம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசிற்கு களப்பயணம் மேற்கொண்ட, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவர்களுடன், கலெக்டர் உமா கலந்துரையாடினார்.
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அரசுத்துறை அலுவலகங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் உள்ள கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்குநாடு சிபிஎஸ்இ பள்ளி ஆகிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளின் மாணவர்களுக்கு முக்கிய அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை நேரில் காணும் வகையில் கனவுப்பயன நிகழ்வு நடைபெற்றது.
மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாடு, தனித்தன்மை வெளிப்பாடு, தன்னார்வ ஈடுபாடு, வேலைவாய்ப்பில் கவனம், தொழில் முனைவு, சமூக ஈடுபாடு போன்றவற்றை மேம்படுத்தும் வகையில், மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களுக்கு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இப்பயணத்தில் மாவட்ட நிர்வாகத்துறைகளான மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகங்கள், மருத்துவத்துறை சார்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, நீதித்துறை சார்ந்த ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம், காவல்துறை சார்ந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களை மாணவ மாணவியர் பார்வையிட்டு நிர்வாக அமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டனர்.
மேலும் மாவட்ட கலெக்டர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாணவ மாணவிகள் கலந்துரையாடி, தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர். கொங்குநாடு கல்வி நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் இந்த களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu