உணவகங்களில் மது அருந்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை : எஸ்.பி. எச்சரிக்கை

உணவகங்களில் மது அருந்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை : எஸ்.பி. எச்சரிக்கை
X

நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

ஹோட்டல்கள், சிக்கன் கடைகளில் மது அருந்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஹோட்டல்கள், சிக்கன் கடைகளில் மது அருந்த அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நாமகிரிப்பேட்டை பகுதியில் தனியார் கறிக்கோழி கடை உள்ளது. இந்த கடையில், மதுபானம் அருந்துவதற்கு அனுமதிப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக நாமக்கல் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் அந்த கடையை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த சிக்கன் கடையில் மதுபானம் அருந்துவதற்கு அனுமதித்தது உண்மை என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் .

மேலும், சம்மந்தப்பட்ட சிக்கன் கடையினை மூடி சீல் வைத்தனர். சிக்கன் கடை உரிமையாளரின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது போன்று, சட்ட விரோதமாக ஹோட்டல்கள், தாபா கடைகள் மற்றும் சிக்கன் கடைளில் மதுபானம் அருந்த அனுமதிப்பது, கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வது மற்றும் போலி மதுபானம் விற்பனை செய்வது உள்ளிட்ட குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும், மேலும், அவர்களின் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு, வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil