எருமப்பட்டியில் 26ம் தேதி மாற்றுத்திறனாகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
எருமப்பட்டியில் 26ம் தேதி, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் 26ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, எருமப்பட்டி சரசு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் மாற்றுத்திறனாளிகளின் உடல் தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு தொண்டை நிபுணர், எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர், மனநல சிகிச்சை மருத்துவர், கண் சிகிச்சை மருத்துவர் மற்றும் செவித்திறன் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்துகொள்வர். சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கு புதியதாக அடையாள அட்டை வழங்குதல், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை புதுப்பித்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு, ஆதார் அட்டை பதிவு, யுடிஐடி அட்டை வழங்குதல், புதிய வங்கி கணக்கு தொடங்குதல், ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், இலவச பயண அட்டை மற்றும் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம் இ சேவை மையம் மூலம் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu