மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சிறப்பு பதிவு முகாம்கள்: கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான, விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான, சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்த, ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் உமா பேசினார்.
நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமதைத்தொகை திட்டத்திற்கான, பயனாளிகள் விண்ணப்பம் செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கலெக்டர் கூறினார்.
நாமக்கல் கலெக்டர் அலவலகத்தில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான, விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், குடும்ப தலைவிகளுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்கம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில், அனைத்து அதிகாரிகளும், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அருகில், விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்கள் நடக்க வேண்டும். விண்ணப்ப பதிவு முகாமில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, பி.டி.ஓ.,க்கள், நகராட்சி கமிஷனர்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து விண்ணப்ப பதிவு முகாமிலும், விரல் ரேகை பதிவு இயந்திரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு விண்ணப்ப பதிவு முகாமிற்கு, ஒரு பொறுப்பு அலுவலரையும், 5 முகாமிற்கு ஒரு மண்டல பொறுப்பாளரையும், 15 முகாமிற்கு ஒரு கண்காணிப்பு அலுவலரையும், நியமித்து விண்ணப்ப பதிவு முகாம் சிறப்பாக நடப்பதை கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்க வேண்டும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், குடும்ப தலைவிகளுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார். டி.ஆர்.ஓ., மணிமேகலை, டிஆர்டிஏ திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu