அரசு மாணவர் விடுதியில் கணக்கில் வராத ரூ.1.69 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

அரசு மாணவர் விடுதியில் கணக்கில் வராத ரூ.1.69 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
X

பைல் படம் 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத, ரூ.1.69 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத, ரூ.1.69 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான, 29 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலில் 10 ஹாஸ்டல்களில் பணிபுரியும், வார்டன்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்தினார்கள். அங்கு, கணக்கில் வராத பணம் வைத்திருப்பதாக, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. அதையடுத்து, டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான போலீசார், அங்குள்ள அரசு மாணவர்கள் ஹாஸ்டலுக்கு சென்று சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கணக்கில் வராத, ரூ. 1 லட்சத்து, 69,000 இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து, அந்த பணம் யாருக்கு சொந்தமானது, எதற்காக வசூல் செய்யப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் ஹாஸ்டலில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி, பணம் பறிமுதல் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!