நாமக்கல்லில் இடைநிலை ஆசிரியர் தேர்வு: 20 பேர் ஆப்செண்ட்

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் போட்டித்தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் 2,768 இடைநிலை ஆசிரியர் பணிக்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) மூலம் இன்று போட்டித் தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா 2 தேர்வு மையங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் தேர்வு, இன்று காலை 10 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை நடைபெற்றது. இத்தேர்விற்கு நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 221 தேர்வர்கள், நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 280 தேர்வர்கள் என மொத்தம் 501 தேர்வர்கள் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். இவர்களில் 10 தேர்வர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். மேலும், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்கள் தேர்வு எழுத, சொல்வதை எழுதும் ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார். 2 தேர்வு மையங்களில் 26 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வினை கண்காணிக்க தலைமை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வை 481 தேர்வர்கள் எழுதினார்கள். 20 தேர்வர்கள் தேர்விற்கு வருகைபுரியவில்லை. இந்த ஆய்வுகளில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் இராஜேந்திரன், சிஇஓ மகேஸ்வரி, டிஇஓக்கள் விஜயன், பாலசுப்ரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu