மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 49 பேருக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 49 பேருக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவி
X

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் உமா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 49 பயனாளிகளுக்கு, ரூ. 4.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 49 பயனாளிகளுக்கு, ரூ. 4.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 549 மனுக்கள் வரப்பெற்றது.

அவற்றைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, கல்லூரி படிப்பிற்காக, தலா ரூ. 30,000 வீதம், 2 பேருக்கு ரூ. 60 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாணவருக்கு ரூ. 10,000 ரூபாய் உதவித் தொகை, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு ரூ. 1.32 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், 2019ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி நீரில் மூழ்கி உயிரிழந்த, திருச்செங்கோடு தாலுகா, முத்தனம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 1.80 லட்சம் மதிப்பில் 27 பேருக்கு, செயற்கை கால் சிறப்பு சக்கர நாற்காலி, கைதாங்கி, ப்ரெய்லி கருவி உள்பட, மொத்தம் 49 பேருக்கு ரூ. 4.83 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சுமன், சப்-கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ. சுகந்தி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி உளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!