நாமக்கல்லில் ரூ.1.43 கோடி திருமண நிதியுதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் ரூ.1.43 கோடி திருமண நிதியுதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் உமா, எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர்.

நாமக்கல் மாவட்டத்தில் பெண்களுக்கு ரூ. 1.43 கோடி திருமண நிதி உதவி மற்றும் 2,688 கிராம் தாலிக்கு தங்கத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பெண்களுக்கு ரூ. 1.43 கோடி திருமண நிதி உதவி மற்றும் 2,688 கிராம் தாலிக்கு தங்கத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பு முடித்த, தகுதியுடைய 97 பெண்களுக்கு தலா ரூ.25,000 திருமண உதவித்தொகை வீதம் ரூ.24.25 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் 776 கிராம் தங்கம் வழங்கினார்.

இதேபோல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்த தகுதியுடைய 239 பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1.19 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் 1,912 கிராம் தங்கம் என மொத்தம் 336 பெண்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி, தலா 8 கிராம் வீதம் 2,688 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) மோகனா உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story