மோகனூர் சோதனை சாவடியில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.61 லட்சம் பறிமுதல்

மோகனூர் சோதனை சாவடியில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.61 லட்சம் பறிமுதல்
X

மோகனூர் சோதனை சாவடி 

மோகனூரில், முட்டை லாரியில் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10.61 லட்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில், வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதையடுத்து, வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்ட எல்லைகளில், சோதனை சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், நாமக்கல் - கரூர் மாவட்ட எல்லையில் மோகனூர் - வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்தில் காவல்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு காவல்துறையினர்சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளாவில் இருந்து, நாமக்கல் நோக்கி வந்த 2 முட்டை லாரிகளை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சங்கர், மோகன், சுப்ரமணி, முருகேசன் தலைமையிலான குழுவினர், நிறுத்தி சோதனை செய்தனர்.

ஒரு லாரியில், ரூ. 5 லட்சம், மற்றொரு லாரியில் ரூ. 5.61 லட்சம் என, மொத்தம் ரூ. 10.61 லட்சம் ரொக்கப்பணம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படையிடனரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings