நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
X

பட விளக்கம் : நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் உமா கலந்துகொண்டார்.

நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்,

நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரியை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் உமா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து, பேரணியில் நடந்து சென்றார். பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, உழவர் சந்தை, நேதாஜி சிலை, பலப்பட்டறை மாரியம்மன் கோயில், கடைவீதி, மெயின் ரோடு வழியாக சென்ற பேரணி, பார்க் ரோட்டில் நிறைவு பெற்றது.

விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் அணிந்து டூ வீலர் ஓட்டிவந்தவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டிவந்தவர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திருகுணா பரிசுகளை வழங்கினார். 250க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பேரணியில் கலந்துகொண்டு ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்தை உணர்த்தும் வகையில் போஸ்டர்களை ஏந்திச்சென்றனர். விழிப்புணர்வு பேரணியில், ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி