மண்டல ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி சாம்பியன்

மண்டல ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி சாம்பியன்
X

மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற, பரமத்தி மலர் பப்ளிக் சீனியார் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், பரமத்தி மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், பரமத்தி மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தியன் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான, மண்டல அளவிலான ரோலர் ஸ்கோட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி மலர் சீனியார் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினர்கள்.

மலர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் அட்ஜஸ்டபிள் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் 11 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கல பதக்கங்கள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, பள்ளிக்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மலர் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். பொருளாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜூ, பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story