குப்பை மேட்டால் பாதிக்கப்படும் ராஜா வாய்க்கால்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குப்பை மேட்டால் பாதிக்கப்படும் ராஜா வாய்க்கால்!   நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

ப.வேலூர் அருகே, ராஜா வாய்க்கால் கரையில், டவுன் பஞ்சாயத்து குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ப.வேலூர் அருகே ராஜா வாய்க்கால் கரை ஓரத்தில் மலைபோல் இருக்கும் குப்பைகளால் பாசன வாய்க்கால் மாசுபடுவதால், அதை சுத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ப.வேலூர் அருகே ராஜா வாய்க்கால் கரை ஓரத்தில் மலைபோல் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், பாசன வாய்க்கால் மாசுபட்டு வருகிறது. அதை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையின், அருகே காவிரி பாசன வாய்க்கால் ராஜ வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் கரையில் குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. குப்பை மேட்டில் இருந்து குப்பை கூளங்கள் சரிந்து ராஜா வாய்க்காலில் விழுவதால், தண்ணீரின் போக்கு தடைபடுவதுடன், தண்ணீர் மாசுபடுகிறது.

பரமத்தி வேலூர் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, வாகனங்களில் கொண்டு வந்து ராஜா வாய்க்கால் கரை ஓரத்தில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகள், பாலிதீன் பைகள், மது பாட்டில்கள், பிளாஸ்ட்டிக் பாட்டில்கள், தெர்மோகோல் அட்டைகள் என பல கழிவுகளால் குப்பை மேடு உருவாகி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசடைந்து வருகிறது.

மேலும் அந்தத் தண்ணீர் மனிதர்களின் உடலில் பட்டால் அரிப்பும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படுகிறது. வாய்க்கால் தண்ணீரில் பிளாஸ்டிக் பைகள், கழிவுகள் மிதந்து செல்வதால் வாய்க்காலில் ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கும் போது பிளாஸ்டிக் கழிவுகளும் தண்ணீருடன் சேர்ந்து ஆடு, மாடுகளின் உடலுக்குள் சென்று பாதிக்கப்படுகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ராஜா வாய்க்கால் ஓரத்தில் நெடுகிலும் மலை போல் குவித்து கொட்டப்பட்டுள்ள, குப்பை கழிவுகளை அகற்றி, தண்ணீர் மாசு படாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!