மோகனூர் நகரில் சமுதாயக்கூடம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், சமுதாயக் கூடம் கட்டித்தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

மோகனூர் நகரில் சமுதாயக்கூடம் அமைக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
X

பைல் படம் 

மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், சமுதாயக் கூடம் கட்டித்தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம்,மோகனூர் டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டு ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து நாமக்கல் மாவ ட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

மோகனூர் டவுன் பஞ்சாயத்து 10வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எங்களுக்கு, 3 தலைமுறைகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. எங்கள் மக்களுக்கு, சமுதாயக்கூடம் கட்டித்தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும், இங்குள்ள நத்தம் புறம்போக்கில், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா போட்டு வழங்கிவிட்டனர்.

அதேபோல், எங்கள் சமுகத்திற்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து முறைகேடாக மனை பட்டா வாங்கி உள்ளனர். அவற்றை மறு பரிசீலனை செய்து, அதே இடத்தில், சமுதாயக்கூடம் கட்டி எங்கள் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 Feb 2024 1:15 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்று முதல் 3 நாட்களுக்கு இலவச யோகா பயிற்சி
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 3. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 4. மேலூர்
  அழகர்கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு: இந்து அமைப்புகள் எதிர்ப்பு
 5. நாமக்கல்
  நாமகிரிப்பேட்டையில் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
 6. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 8. காஞ்சிபுரம்
  பரந்தூர் விமான நிலையத்திற்கு 218 பேரிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்
 10. ஈரோடு
  ஈரோடு டவுன் பகுதியில் நாளை மின்தடை