நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 43 பேருக்கு பணி நியமன உத்தரவு

நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 43 பேருக்கு பணி நியமன உத்தரவு
X

பைல் படம் 

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 200 பேர் பங்கேற்றனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 200 பேர் பங்கேற்றனர். பல்வேறு நிறுவனங்களுக்காக 43 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

தனியார்துறை நிறுவனங்களும்,- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும் ‘தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்’ நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கிறது.

அதன்படி, இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். இம்முகாமில், 27 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூடர்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டன்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்தனர்.

அதில், 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, டிப்பளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்கள், ஆண், பெண் என, மாவட்டம் முழுவதும் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில், 43 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!