பராமரிப்பு பணிகளுக்காக நல்லூர் பகுதியில் வரும் 13ம் தேதி மின்நிறுத்தம்

பராமரிப்பு பணிகளுக்காக நல்லூர் பகுதியில் வரும் 13ம் தேதி மின்நிறுத்தம்
X
பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 13ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் பகுதியில் வரும் 13ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நல்லூர் துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 13-ஆம்தேதி செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால், நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளிலும், நல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் இதர பகுதிகளிலும் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்