குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் கோரிக்கை மனு

குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் கோரிக்கை மனு
X

குடிநீர் வசதி கோரி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக, பஞ்சப்பாளையம் கிராம மக்கள் காலி குடங்களுடன் வந்திருந்தனர்.

பஞ்சப்பாளையம் கிராம மக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் வந்து, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பஞ்சப்பாளையம் கிராம மக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் வந்து, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 565 மனுக்கள் அளிக்கப்பட்டன. குடிநீர் கேட்டு பரமத்தி வேலூர் அருகே பஞ்சபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பரமத்தி வேலூர் அருகே பஞ்சப்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 6 மாத காலமாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் அனைவரும் குடிநீரின்றி பெரும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி 23வது வார்டில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடட்டுள்ளதாவது: குமாரபாளையம் நகராட்சி 23வது வார்டு ஆனங்கூர் சாலையில் பரமகவுண்டர் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்லும்

30 அடி சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் குடியிருப்புகளுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரி வசதி:

நாமக்கல், பழைய அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தில் தாலுக்கா அளவிலான ஆஸ்பத்திரி அமைத்து செயல்படுத்த வேண்டும் எனக்கோரி நாமக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி மீட்புக் குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள பழைய மாவட்ட அரசு ஆஸ்பத்திரி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நாமக்கல்லில் இயங்கி வந்தது. அந்த ஆஸ்பத்திரி தற்போது அறசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் பழைய கட்டிடம் கேட்பாரின்றி உள்ளது. இந்த கட்டிடத்தில் தாலுக்கா அளவிலான மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கல்லீரல் பாதுகாக்க சில வழிகளை காணலாமா..? அப்போ இதோ உங்களுக்கான குறிப்பு..!