ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வறட்சி நிவாரண நிதி வழங்க விவசாய முன்னேற்ற கழகம் கோரிக்கை

ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வறட்சி நிவாரண நிதி வழங்க விவசாய முன்னேற்ற கழகம் கோரிக்கை

செல்ல ராஜாமணி, விவசாய முன்னேற்ற கழக தலைவர்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாய முன்னேறக்கழகத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாய முன்னேறக்கழகத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் வக்கீல் செல்ல ராஜாமணி, பொதுச் செயலார் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் தற்போது, பல்வேறு மாவட்டங்களில் மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்றுவதற்கு கடினமான முறையில் போராடி வருகிறார்கள். எனவே, தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் வறட்சியான மாவட்டங்களாக அறிவித்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதி பெற்று, உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் வறட்சி நிவரணமாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு, தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவமழையும் மிக மிக குறைவாக பதிவாகியுள்ளது. பருவ காலத்தில் பெய்ய வேண்டிய மழை, பெரும்பாலான மாவட்டத்தில் பெய்யாமலும், சில டெல்டா மாவட்டத்தில் பருவம் தவறி கனமழை பெய்தும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் நெல் வயல் தண்ணீரிலும் மிதந்தது. ஒரு புறம் வறட்சியிலும், ஒரு புறம் மழையாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள், கூட்டுறவு வங்கியிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும், தனியாரிடமும் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசும், தமிழக அரசும், தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்த அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் பயிர் காப்பீட்டு நிவாரண தொகையை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். விவசாயிகளும், மத்திய அரசும், தமிழக அரசும் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு பல கோடி ரூபாயை இன்சூரன் நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளனர்.

இது போன்ற பெரு வெள்ளம் மற்றும் வறட்சியான காலங்களில், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரம் காத்திட உதவிடும் வகையில் நிவாரண உதவியை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த கோடை காலத்தை பயன்படுத்தி ஏரி, குளம், குட்டைகளில் தூர் வாருவதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story