கொல்லிமலை விவசாயிகளுக்கு மிளகு உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

கொல்லிமலை விவசாயிகளுக்கு மிளகு உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
X
தரமான மிளகு உற்பத்தி குறித்து, கொல்லிமலையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தரமான மிளகு உற்பத்தி குறித்து, கொல்லிமலையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பாரம்பரிய உணவுகள் தயாரிப்பதில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. அகில இந்திய அளவில் கொல்லிமலையில் அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் மிளகு பொதுமக்களால் அதிக அளவில் விரும்பி உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் தரமான மிளகு உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோயில் அரங்கில், இந்திய நறுமன பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் நிலையான மிளகு உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கொல்லிமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமை வகித்தார். நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சீனிவாசன், காந்தியண்ணன், லிஜோ தாமஸ் மற்றும் முகமது சைல் பிரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிளகு உற்பத்தியின் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மிளகு நுண்ணூட்ட கலவை மற்றும் பயிர் பாதுகாப்பு இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. நறுமணப் பயிர்கள் வாரியத்தின் உதவி இயக்குனர் கனகதிலீபன் உள்பட திரளான விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story