குறைபாடுள்ள காருக்கு பதில், புதிய காரை வழங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - கார் உற்பத்தி நிறுவனத்திற்கு நுகர்வேர் கோர்ட் உத்தரவு

குறைபாடுள்ள காருக்கு பதில், புதிய காரை வழங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - கார் உற்பத்தி நிறுவனத்திற்கு நுகர்வேர் கோர்ட் உத்தரவு
X
குறைபாடுள்ள காரை விற்பனை செய்த நிறுவனம், அதற்கு பதில் புதிய காரை வழங்குவதுடன், வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குறைபாடுள்ள காருக்கு பதில், புதிய காரை வழங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - கார் உற்பத்தி நிறுவனத்திற்கு நுகர்வேர் கோர்ட் உத்தரவு

நாமக்கல்,

குறைபாடுள்ள காரை விற்பனை செய்த நிறுவனம், அதற்கு பதில் புதிய காரை வழங்குவதுடன், வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராசிபுரம் அருகே உள்ள தொட்டியபட்டியில் வசித்து வருபவர் சரவணகுமார் (43). இவர் கடந்த 2020 அக்டோபர் மாதம் ரூ. 20,03,841 செலுத்தி நாமக்கல்லில் உள்ள கார் டீலரிடம், புதிய டாடா நெக்ஸான் கார் ஒன்றை வாங்கியுள்ளார். காரை வாங்கிய 26 நாட்களில் காரின் வெளிப்புறத்தில் பல இடங்களில் பெயிண்டிங் குறைபாடு தோன்றியுள்ளது. அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் கார் உற்பத்தி நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். கார் அதன் டீலர் மூலம் ரிப்பேர் செய்து கொடுக்கப்பட்டது. மீண்டும் சில நாட்களில் காரின் வெளிப்புறத்தில் உள்ள பெயிண்டிங்கின் தோற்றம் மாறத் தொடங்கியுள்ளது. மீண்டும் காரை டீலரிடம் சரவணகுமார் கொடுத்துள்ளார்.

குறைகளை முழுமையாக சரி செய்யாததால் அதிருப்தி அடைந்த சரவணகுமார் காரை டெலிவரி எடுக்காமல், குறைபாடுள்ள தனது பழைய காருக்கு பதில் புதிய கார் கொடுக்க வேண்டும் என கார் உற்பத்தியாளருக்கு தெரிவித்துள்ளார். ஆனால், அவரது வேண்டுகோளை ஏற்க கார் உற்பத்தி நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் கார் உற்பத்தி நிறுவனத்தின் மீதும் கார் டீலர் மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சரவணகுமார் கடந்த கடந்த மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்கள். புதிய காரில் ஏற்பட்ட பெயிண்டிங் குறைபாடுகளை சரி செய்துவிட்டதாக சர்வீஸ் சென்டர் ஒப்புக் கொள்வதன் மூலம், குறைபாடுகளுடன் புதிய கார் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கும் போதே பழுதுடன் கார் இருந்துள்ளதால் கார் உற்பத்தி நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு 8 வாரத்துக்குள் அதே வகை புதிய காரை வழங்க வேண்டும் அல்லது வழக்கு தாக்கல் செய்தவர் செலுத்திய பணத்தை, பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

புதிய காரை உற்பத்தியாளர் வழங்கும் வரை, வழக்கு தாக்கல் செய்துள்ளவர் பயன்படுத்துவதற்காக, அவரது பழைய காரை, நன்கு இயங்கும் நிலையில் அவருக்கு வழங்கவும், மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீட்டை கார் உற்பத்தி நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
ai products for business